உள்ளாட்சி தேர்தல்: மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.! தாக்குப்பிடிக்குமா? தமிழகம்.!! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால், நிதி தர முடியாது என்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தள்ளார். மக்களவையில் ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி எழுந்தன.
 
தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படைத்தன்மை எப்படி நிலவும்? பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை,  உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் எந்த திட்டம் என்றாலும் கமிஷன், வசூல், ஊழலே காணப்படுவதாக குற்றம்சாட்டி பேசினார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், தேர்தலை நடத்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காது என்று கூறினார். 

உள்ளாட்சி தேர்தல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தேர்தல் நடத்தப்படவில்லை என தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுத்திருப்பதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

உச்சநீதிமன்றம் இன்னும்  3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அக்டோபர் மாதத்திற்கு பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்தமுடியும் என்றும், எனவே அக்டோபர் 31ம் தேதி வரை கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu election commission delayed Local election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->