தமிழக இடஒதுக்கீட்டு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு..!! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்பிற்கு மருத்துவ பட்டம் மற்றும் பட்டயப் படிப்பில் எடுத்துக் கொள்ளப்பட்ட 15 சதவிகித இடங்களிலும் முதுநிலை பட்டப்படிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 50 சதவிகித இடங்களிலும் & தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு (கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்பு மற்றும் பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்குதல்) சட்டம் 1993ன் படி இடஒதுக்கீடுகளை பின்பற்றாமல் மத்திய அரசு இந்தச் சட்டத்தை மீறி உள்ளது.

எனவே, மத்திய தொகுப்பு இடங்களிலும் தமிழகத்தின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். மேற்கண்ட சட்டத்தின்படி மத்திய தொகுப்பிற்கு எடுக்கப்பட்ட இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஐம்பது சதவிகிதம் இட ஒதுக்கீட்டையும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவிகித இட ஒதுக்கீட்டையும், பழங்குடியினருக்கு ஒரு சதவிகித இடஒதுக்கீட்டையும் அமல்படுத்த வேண்டும். 

மேலும், இதனை 2020-21 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையின் போதும் அதற்குப் பின்பும் இதைப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்த இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கு உரிய ஆணைகளை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் 2/6/20 அன்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பி.வி.சுரேந்திரநாத் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வாதாடுகிறார் " என்று கூறியுள்ளார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPIM K Balakrishnan complaint register in court


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->