#Breaking: இன்று தமிழகத்தில் 5,344 பேருக்கு கொரோனா உறுதி.. குணமடைவோரின் எண்ணிக்கை அதிகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தது.. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்ததன் எதிரொலியாக, கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று கொரோனாவால் 5,344 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,47,337 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,492 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 4,91,971 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 60 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 8,871 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 982 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,625 ஆக உயர்ந்துள்ளது.

துவக்கத்தை விட கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து இருந்தாலும், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டிற்குள் வருகிறது. இதில் ஆறுதல் விஷயமாக குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Corona Virus Update 21 September 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->