தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா! 25 வயது இளைஞருக்கு பாதிப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று வரை மொத்தம் ஒன்பது பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் ஒருவர் உடல் நலம் சரியாகி வீடு திரும்பியுள்ளார். மீதமுள்ள 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் 9 பேரும் வெளியிடங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்று மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில் லண்டனில் இருந்து திரும்பிய 48 வயதான திருப்பூரைச் சேர்ந்த நபருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல சென்னை புரசைவாக்கத்தினை சேர்ந்த 25 வயது இளைஞரும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இவரும் லண்டனிலிருந்து திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் மூன்றாவது நபர் தமிழகத்தில் மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் என கூறப்பட்டுள்ளது. இவர் COPD என்ற நோயினாலும் நீரிழிவு நோயினாலும் ஹைபர்டேன்ஷன் நோயினாலும் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருடைய நிலை கவலை அளிக்க கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அவர் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று வரவில்லை என்பது இங்கே கவனிக்கத் தக்கதாக இருக்கிறது. 

ஏனெனில் இதுவரை பாதிக்கப்பட்ட 12 பேரில் 11 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இவர் ஒருவர்தான் தமிழகத்திலேயே இருந்து நோய் தொற்று வந்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக தமிழகத்திலேயே இருந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அச்சம் உருவாகியுள்ளது. அவர் தற்போது சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கேரளாவிலிருந்து பரவியதா, இல்லை தமிழகத்திலே கொரோனா தொற்று உள்ளதா என்ற அச்சம் தற்போது உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu corona patient count increased to 12


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->