ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை சட்டமாக்குவதா?.. கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு தாக்கல் செய்த விவசாய சட்டத்திருத்த மசோதாவானது பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்த மசோதாவினை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், வாக்கெடுப்பிற்கு பின்னர் அதிகாரபூர்வமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் கூட்டணிக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய நிலைமை மற்றும் பிற விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, " சிறு விவசாயிகள் மற்றும் கிராமங்கள் இருக்க கூடாது என்கிற, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இலட்சம் ஏக்கர் என்ற பண்ணை விவசாயத்தை கொண்டு வருவதே அதன் இலக்கு.. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Congress KS Alagiri Press meet 21 September 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->