சம்பள பிடித்தம் கிடையாது.. பிற மாநில தமிழர்களுக்கு தேவையான உதவி.. பத்திரிகையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம்.. முதல்வர் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், அனைவருக்கும் வணக்கம். இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்று நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து வந்து பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு தங்கும் இடம், சாப்பாடு, உடை போன்ற அத்தியாவசிய தேவையை தமிழக அரசு செய்து கொடுத்துள்ளத்து. அசாம் போன்ற பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் உள்ளனர். 

இவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையானதை கேட்டறிந்தேன்.. அரசு செய்வதையும் கூறியுள்ளேன். பிரதமரின் ஆலோசனைப்படி, தமிழகத்தில் தங்கியுள்ள பிற மாநில மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான அனைத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். 

அரசு எடுத்துவைத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளது. பிற மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த நபர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18 ஆயிரம்.. வணிக நிறுவனத்தில் 3 ஆயிரம் பேரும், உணவகத்தில் 7 ஆயிரம் பேரும், பண்ணையில் 5 ஆயிரம் பேரும் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலத்தில் பணியாற்றி வரும் நபர்களின் எண்ணிக்கை 7 ஆயிரம் ஆகும். தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நபர்களுக்கு அந்தந்த மாநில முதல்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர்களுக்கு தேவையான உதவியை செய்ய ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல தடை இலை என்பது பல முறை தெளிவுபடுத்திவிட்டோம்.. பிற மாநிலத்தில் இருந்து வரும் வாகனத்தின் வருகைக்கு தடை ஏற்பட்டுள்ளதால் சிறிது நெருக்கடி ஏற்பட்டுள்ளது, மத்திய அரசு இந்த விஷயத்தை மேற்கோள்காட்டி அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல விலக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளது. 

மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து தொலைக்காட்சியில் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நோயின் வீரியம் தெரியாமல் வெளியே சுற்றி வரும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோயின் வீரியம் மக்களுக்கு தெரியவேண்டும்.

இதற்கு மருந்து கிடையாது என்பது ஊடகங்களில் தெரிவிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் இதனை முற்றிலும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மத்திய அமைச்சகம் 144 தடை உத்தரவை மீறும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளது. 144 மக்களை துன்புறுத்த போடப்பட்ட சட்டம் கிடையாது. மக்களின் பாதுகாப்பிற்க்காக போடப்பட்டுள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். ஓவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். இதன் காரணமாகவே அரசும், அரசு ஊழியர்களும் தொடர்ந்து போராடிக்கொண்டு வருகிறோம். நோயின் வீரியத்தை குறைக்க, அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

அத்தியாவசிய தேவையை வாங்க தினமும் கடைக்கு செல்ல கூடாது.. ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் எதோ ஒரு காரணத்தை கூறி வெளியே வருவது தவறானது. இனி சட்டம் தன் கடமையை செய்யும்.. மக்கள் ஒத்துழைப்பை சரியான முறையில் செயல்படுத்த  தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

ஏற்கனவே தமிழகத்தில் இருந்து பிற மாநிலத்திற்கு சென்ற அனைவருக்கும் தேவையான உதவியை செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டு, அந்தந்த மாநில அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிற மாநில தொழிலாளர்களுக்கும் நமது தமிழக அரசு அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் வழங்கி வருகிறது. 

அரசுக்கு பல்வேறு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், நெருக்கடி சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. அவர்களின் சம்பளம் அப்படியே வழங்கப்படும். மளிகை பொருட்களை அதிகளவு விலைக்கு விற்பனை செய்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கேட்கப்பட்ட நிதி பரிசீலனை செய்யப்பட்ட பின்னர் மத்திய அரசு வழங்கும். 

சாலையோரத்தில் இருக்கும் நபர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து தேவையான உதவிகள் செய்து வருகிறோம். 144 தடை உத்தராவது மீறி வெளியே வரும் நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் ரூ.1000 டோக்கன் வழங்கப்படும் போதே வழங்கப்படும். அரசு பதிவு செய்த பத்திரிகை பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu cm press meet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->