#Breaking: 14 நாட்கள் மிக முக்கியம்.. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உச்சகட்ட எச்சரிக்கையுடன் கோரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களிடையே உரையாற்றினார். 

இது தொடர்பான உரையில், " தமிழக முதல்வராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதன் முதலாக 5 முக்கிய வாக்குறுதிகளை செயற்படுத்த கையெழுத்திட்டேன். மக்கள் முழு ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். எனது தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்கான அரசாக செயல்படும். 

முதல்வராக வந்ததும் ரூ.4000 ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தேன். முதற்கட்டமாக மே மாதத்தில் ரூ.2000 வழங்கப்படும். தமிழக அரசு கொரோனா வைரஸை தடுக்க முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறது. 

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இளைஞர்களை பாதித்து வருகிறது. இரண்டு முதல் மூன்று நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகிறார். உடல் வலிமையை கொரோனா வைரஸ் தொற்று அழிக்கிறது. 

வடமாநிலத்தை போன்ற சூழல் தமிழகத்தில் ஏற்படவில்லை என்றாலும், 10 மாவட்டங்களின் நிலைமை கவலைக்கிடக்கமாக உள்ளது. இன்னும் 2 வாரத்தில் கொரோனா அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். 

அதிகாரிகளின் ஆலோசனைப்படி ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர்த்து, பிற எந்த பணிகளுக்கும் அனுமதி கிடையாது. பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனமாக இருங்கள். கொரோனவிற்கான அறிகுறி இருந்தால் பயம் இல்லாமல் மருத்துவமனைக்கு செல்லுங்கள். இதுவும் கடந்து போகும் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM MK Stalin Speech with TN Peoples about May 10 to 24 May 2021 Lockdown


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->