தமிழக முதல்வர் - ஆளுநர் நேரில் சந்திப்பு.. நீட் குறித்து விவாதிக்கலாம் வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ரவியை நேரில் சந்திக்க சென்றுள்ளார்.

தமிழக ஆளுநர் ரவியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அக்.13 ஆம் தேதி மாலை 5 மணியளவில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சரியாக 5 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். 

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழக ஆளுநர் ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசவுள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகம் தொடக்கத்தில் இருந்து போராடி வரும் நிலையில், அதற்கு மத்திய அரசு இசைவு தெரிவிக்காத காரணத்தால், அதுகுறித்து முதல்வர் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சந்திப்பில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன், அமைச்சர் துரைமுருகன் உட்பட முக்கிய அரசுத்துறை அமைச்சர்கள் சென்றிருப்பதாகவும் தெரியவருகிறது. நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM MK Stalin Meets TN Governor RN Ravi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->