#Breaking: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவசர கடிதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரேநாளில் 26,465 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், பலி எண்ணிக்கையும் 200 ஐ நெருங்கியுள்ளது. தமிழகத்தின் மொத்த கொரோனா பரவல் எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது தொடர்பான கடிதத்தில், " தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடுமையாக அதிகரித்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்து வருகிறது. 

இதனால் தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஆக்சிஜன் தேவைப்படுவதால், மத்திய அரசு தமிழகத்திற்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வரும் 4 நாட்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. மருத்துவ ஆக்சிஜன் வழங்கும் நடவடிக்கையையும் பிரதமர் மோடி துரிதப்படுத்த வேண்டும் " என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM MK Stalin Letter to PM Modi About Oxygen Tanker Want 40 metric Ton


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->