அதிரடி..! கிராம சபை கூட்டத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு.. உற்சாகத்தில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


தேர்தல் வாக்குறுதியை கட்டாயம் நிறைவேற்றுவோம். மீதமுள்ள வாக்குறுதிகள், தேவைகள் என அனைத்தும் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதியளித்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, பாப்பாபட்டி கிராமத்திற்கு சென்றார். அங்கு நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நிலையில், வழியில் கே. நாட்டப்பட்டி கிராமத்தில் வயலில் பணியாற்றி கொண்டு இருந்த பெண் தொழிலாளர்களிடம் பேசினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். 

இதனைத்தொடர்ந்து, பாப்பாபட்டியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன், அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 

முதலில் கிராம சபை கூட்டத்தில் மக்களுடன் உறுதிமொழியெடுத்துக்கொண்ட பின்னர், மக்களிடம் குறைகளை கேட்டார். இதன்போது, கிராம மக்கள் பாப்பாபட்டி கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். பாப்பாபட்டி கிராமம் முன்மாதிரி கிராமமாக மாற்றப்பட்டு, இருவழிப்பதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இதனைத்தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், " பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடைக்கோடி மக்களின் குரலை கேட்க கிராமத்திற்கு வந்து, கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளேன். வடமாவட்டம், தென்மாவட்டம் என்ற வேற்றுமை இல்லாமல், தமிழகத்தின் வளர்ச்சியே அரசின் இலக்கு. 

மீதமுள்ள வாக்குறுதிகள், தேவைகள் என அனைத்தும் நிறைவேற்றப்படும். தேர்தல் வாக்குறுதியை கட்டாயம் நிறைவேற்றுவோம். பாப்பாபட்டியில் ஊராட்சிமன்ற கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், நியாய விலை கடைக்கு கட்டிடம் போன்றவை கட்டி தரப்படும். கதிர் அடிக்கும் இயந்திரம் ரூ.6 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். 

பாப்பாபட்டி கிராம மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசுமரபுப்படி கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், மறக்க முடியாத நிகழ்வாக பாப்பாபட்டி கிராம சபை கூட்டம் இருக்கிறது " என்று தெரிவித்தார். 

தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM MK Stalin Attend Gram Shaba Function at Madurai Usilampatti Pappapatti Village


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->