#Breaking: அதிவேகத்தில் நெருங்கும் நிவர்... மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை..! - Seithipunal
Seithipunal


மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரியை மையமாக கொண்டு வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், நாளை மாலை கரையை கடக்கவுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தது. 

மக்கள் வீடுகளை விட்டு இரண்டு நாட்களுக்கு வெளியே வரவேண்டாம் என்றும், தேவையான பொருட்களை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு நிலையில், அசம்பாவிதத்தை தடுக்கும் பொருட்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர் உட்பட 7 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 

புயல் கடந்து சென்றதும் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள தேசிய மீட்பு படையினரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களில் முகாம்களில் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில், மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நிவர் புயல் நெருங்கி வரும் காரணத்தால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். 

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இந்த திடீர் ஆலோசனையானது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Meeting with Ministers about Nivar Cyclone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->