திமுக ச.ம.உவின் சொந்த தொகுதியில், கிழித்து தொங்கவிட்ட தமிழக முதல்வர்.. பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜிக்கு அதிமுக தான் விலாசம் கொடுத்தது. அவரை அமைச்சர் ஆக்கியது. ஆனால், துரோகம் செய்து மாற்று கட்சிக்கு சென்றார் என தமிழக முதல்வர் சரமாரி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறைந்த முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவச்சிலைகளை திறந்துவைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன்போது, மக்களிடம் பொய்யான வாக்குறுதி அளித்து வரும் திமுக குறித்து சரமாரி விமர்சனம் செய்திருந்தார். 

முதல்வர் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், " செந்தில் பாலாஜிக்கு அதிமுக தான் விலாசம் கொடுத்தது. அவரை அமைச்சர் ஆக்கியது. ஒரே வருத்தில் இரண்டு சின்னத்தில் போட்டியிட்டு, மூன்று கட்சிகள் தாவியவர் என்ற பெருமையை செந்தில் பாலாஜி படைத்துள்ளார். தில்லு முல்லு செய்து செந்தில் பாலாஜி திமுக மாவட்ட செயலாளர் பதவியை வாங்கியுள்ளார். 

திமுகவிற்காக உழைத்த பலர் இருக்கையில், செந்தில் பாலாஜிக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஊர் ஊராக சென்று அரவக்குறிச்சியில் 5 சென்ட் நிலம் கொடுப்பதாக பிரச்சாரம் செய்து, மக்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளார். 

மக்களை ஏமாற்றவேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் செந்தில் பாலாஜியிடம், பொய்யான வாக்குறுதிகளை எப்படி வழங்குவது என எதிர்க்கட்சியினர் கேட்டு தெரிந்து கொள்ளலாம். காலத்திற்கு ஏற்றாற்போல நடிப்பதற்கு அவருக்கு தெரியும். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், தடையை உடைத்து அதிமுக வெல்லும். 

உண்மை, நீதி என்றுமே நிலைத்து நிற்கும். திமுகவின் பொய் நிலைத்து நிற்காது. மக்கள் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினரை வெற்றிபெற வைப்பார்கள். அதிமுக அரசு தான் மிகப்பெரிய பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தியளவில் சட்டம் ஒழுங்கை தமிழகம் பேணிக்காக்கிறது " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Trolled DMK MLA Senthil Balaji 21 Feb 2021 Karur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->