சத்தமே இல்லாமல் டாப் கியரில் பறக்கும் தமிழக முதல்வர்.. கொண்டாட்டத்தில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள வடபழனியில் தனியார் மருத்துவமனையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இதன்போது பேசிய முதல்வர், " நோய்னாடி, நோய் முதல் நாடி என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பேச துவங்கினார். 

நலமான மாநிலம் மற்றும் வளமான மாநிலமாக திகழ்ந்து வரும் தமிழகத்தில், பல முன்னோடி திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி இருக்கிறது. முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பல நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. 

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் அதிகளவு பிரசவங்கள் நடைபெறுகிறது. புதியதாக 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 11 மருத்துவ கல்லூரிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள 11 மருத்துவ கல்லூரிகள் மூலமாக கூடுதலாக 1650 மருத்துவர்கள் உருவாகுவார்கள். 2030 ஆம் வருடத்தில் தமிழகம் அடையவேண்டிய மருத்துவ இலக்கினை, இப்போதே தமிழக அரசு அடைந்துள்ளது. இந்திய மருத்துவ தலைநகரமாக தமிழக அரசு திகழ்கிறது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Speech Vadapalani 26 October 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->