#Breaking: ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவவே உள் ஒதுக்கீடு - தமிழக முதல்வர் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதை மேற்கோள்காண்பித்தே, 7.5 உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நான் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வந்ததால், அரசு பள்ளி மாணவர்களின் மனதில் உள்ள எண்ணத்தை கருத்தில் கொண்டு உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் தொடர்பாக பொது இடங்களில் பேசக்கூடாது. அது தவறானது. 

அரசு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளது. 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் மக்கள் பாதிக்க கூடாது என அரசு கவனமாக இருக்கிறது. அண்ணா. பல்கலை., சூரப்பா விவகாரத்தில் விசாரணைக்கு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நீட் எதிர்ப்பு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சிதான் நீட் தேர்வை கொண்டு வந்தது. அவர்களை யாருமே கேள்வி கேட்கவில்லை. ஏழை மக்களுக்கு உதவி செய்யவே உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet Coimbatore 18 November 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->