#Breaking: இராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் எப்போது?.. தமிழக முதல்வர் அரியலூரில் பதில்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார். மாவட்ட நிர்வாகத்தினருடன் நிறைவுற்ற பணிகள் துவக்க விழா, அடிக்கல் நாட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 

இதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கிறது. அரியலூரில் 510 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. கடந்த சில மாதத்திற்கு முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் இல்லாத பேச்செல்லாம் பேசினார். இன்று கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா அதிகரித்துவிட்டது. 

தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா தொடர்ந்து கட்டுக்குள் வைக்கப்பட்டு வருகிறது. காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சிகள் அன்று குற்றம் சாட்டினார்கள். இன்று பாராட்டக்கூட மாட்டார்கள். பிற மாநிலத்தை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா வெகுவாக குறைந்துள்ளது. அரசே மக்களை தேடிச்சென்று குறைகளை தீர்த்து வருகிறது. விபத்தில் கைகளை இழந்து, இரண்டு கைகள் இல்லாமல் தவித்து வந்தவருக்கு, கைகளை பொருத்தி தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல் தொடர்பான கோரிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவு நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ.347 கோடி செலவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அரியலூரில் அமைக்கப்படவுள்ளது. இதனால் 150 மாணவர்கள் மருத்துவர்களாக மாறுவார்கள். அரியலூர் மாவட்டத்தில் நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 

அரசின் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காண்பித்தால், கட்டாயம் கொரோனா பரவல் ஏற்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அம்மா மினி கிளினிக் என்றே பெயர் மக்கள் மனதில் இடம்பெறவேண்டும் என்ற எண்ணத்திலேயே வைத்தது. சைக்கிள், பைக் என்பதை போல மக்கள் மனதில் எளிதாக அவ்வார்த்தை இடம்பெற வேண்டும் என்பதாலேயே மினி கிளினிக் என்ற பெயர் வைக்கப்பட்டது. இராஜராஜ சோழனிற்கு மணிமண்டபம் கட்டும் பணி அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet Ariyalur 17 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->