ஸ்டாலின் எனக்கு சர்டிஃபிகேட் கொடுக்க வேண்டாம்.. தமிழக மக்களுக்கு தெரியும் - முதல்வர் அதிரடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்டத்தில் நிறைவுற்ற பணிகள் திறப்பு, அடிக்கல் நாட்ட வேண்டிய புதிய பணிகள், மாவட்டத்தின் வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினரின் செயல்பாட்டால் கரூரில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவங்கி வைத்த, போச்சலூர் காவேரி ஆற்றின் குறுக்கே கதவனை அமைக்கும் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் எப்போதும் துண்டிக்கப்படாது. விவசாயிகளுக்கான மின்சாரம் துண்டிப்பு தொடர்பான செய்தி, எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு என்றுமே நிறுத்தாது. விவசாயிகள் இலவச மின்சாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கூற்றை நம்ப வேண்டாம். 

ஸ்டாலின் கூறி விவசாயியாக நான் இருக்க வேண்டாம். ஸ்டாலின் எனக்கு விவசாயியா? போலி விவசாயியா? என்ற சான்றிதழ் கொடுக்க வேண்டாம். நான் விவசாயி என்பது எனது ஊர் மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தெரியும். ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. 

வேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவதில்லை. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள பிரச்சனையை ஒழிக்கவே வேளாண் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. வடமாநிலங்களில் ஏஜென்ட் மூலமாக மட்டுமே விளைபொருட்கள் விற்பனை செய்ய முடியும். இதனை ஒழிக்கவே அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet 16 December 2020 Karur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->