ஸ்டாலினின் 100 நாள் வியூகத்தை, 1100 இல் காலி செய்த முதல்வர் பழனிசாமி! பிரச்சாரத்தில் பின்னி பிடலெடுக்கும் இபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (9.2.2021) ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, "ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பெட்டி ஒன்றை வைக்கிறார். உங்கள் பிரச்சினைகளை எல்லாம் பெட்டியில் போடுங்கள், நான் பூட்டி வைத்துக் கொள்கிறேன் என்கிறார். 

முதல்வர் ஆன பிறகு 100 நாட்களுக்குள் அதற்குத் தீர்வு காண்பதாக ஸ்டாலின் கூறுகிறார். 100 நாட்களில் தீர்வு காண இது என்ன படமா? பெட்டி என்றால் திமுகவினருக்குப் பிடிக்கும், அதனால் தான் போகும்போதே பெட்டி எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். இவர் எப்போ முதல்வர் ஆவது பெட்டியை திறந்து பார்ப்பது, கையில் கொடுக்கும் மனுவையே சரியாக படிக்க தெரியவில்லை, இதில் எங்கிருந்து பெட்டியை திறந்து மனுவை படிக்க போகிறார் என பேசினார். 

மேலும் இது விஞ்ஞான உலகம், பெட்டியில் மனு போடுவது அந்தக் காலத்தோடு முடிந்துவிட்டது. இப்போது எல்லாம், அனைவர் கைகளிலும் செல்போன் உள்ளது. குடிநீர் பிரச்சினையா, சாலைப் பிரச்சினையா அதை முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்க்கும் மேலாண்மைத் திட்டத்தை இன்னும் ஒரு வார காலத்தில் தொடங்க இருக்கின்றோம். ஒரு போட்டோ போட்டால் போதும், அது நேரடியாக முதல்வருக்கு வரும். அதற்கு உதவி மையம் எண் 1100. இன்னும் 10 நாட்களில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. உங்களுடைய இல்லத்தில் இருந்தே பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது, என தல்வர் பழனிசாமி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Election Campaign 9 Feb 2021 About MK Stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->