#Breaking: தேர்தல் அறிக்கையை வெளியிட்டதும் செய்தியாளர்கள் சந்திப்பு.. முதல்வர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

2021 சட்டமன்ற தேர்தலையொட்டி ஆளும் கட்சியான அதிமுக 178 தொகுதிகளில் களமிறங்குகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க., பா.ஜ.க, த.மா.கா. உள்பட கூட்டணி கட்சிகளுக்கு 55 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

தேர்தலின் நாயகனே தேர்தல் அறிக்கை தான் என்பதால், அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்காக அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் காத்து கொண்டு இருக்கின்றனர். சர்வதேச மகளிர் தினம் அன்று, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகளிர் நலனுக்காக குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும். ரூ.1,500 குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும். மேலும் பல அறிவிப்புகள் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று அறிவித்திருந்தார்.

இன்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர். 

இதன்போது, அனைவருக்கும் வீடு., அம்மா இல்லம் திட்டம், மகளிர் நலன் காக்கும் குலவிளக்கு திட்டம், மகளிருக்கு பேருந்து பயணச் சலுகை, சட்ட ஒழுங்கின் அமைதிப்பூங்கா தமிழகம், அம்மா அவர்களின் தொலைநோக்குத் திட்டம் 2023, வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், ஆண்டுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் 6 இலவச கேஸ் சிலிண்டர், வாழ்வாதார உதவியாக ஆண்டிற்கு உழவு மானியம், சூரியசக்தி சமையல் அடுப்பு உட்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்று இருந்த நிலையில், தேவர் சமுதாயம் சார்பாக நீண்ட வருடங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வரும் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்படவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, " தேர்தல் அறிக்கை குழு மிகச்சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயார் செய்து சமர்ப்பித்துள்ளது. அதிமுகவின் திட்டத்தால் மக்கள் பல நன்மைகள் பெற்றுள்ளனர். புயல், கடும் வறட்சி, வெள்ளம் போன்ற காலங்களில் விவசாய பெருமக்கள் கடந்த காலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

இதன்போது விவசாய பெருமக்கள் தங்களின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 14 ஆயிரம் கோடி அளவிலான விவசாய கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் மூலமாக பருவமழை நீர் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 வருடமாக டெல்டா பாசன விவசாயிகள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் அரசாக அதிமுக அரசு இருக்கிறது. 

விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளை இணைத்து காவேரி - குண்டாறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தியுள்ள ஒரே அரசு அதிமுக தலைமையிலான அரசு தான். அதிமுக ஏற்கனவே கூறி வந்த விஷயத்தை தான் தொகுத்து திமுக அறிவித்துள்ளது. நாங்கள் செயல்படுத்தியுள்ள திட்டங்களை கூட திமுக செய்வோம் என்று அறிவித்துள்ளது. 

அதிமுக அரசு சட்டம்  அமல்படுத்தி நிறைவேற்றியுள்ள விஷயங்களை, நாங்கள் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றுவோம் என்று திமுக தெரிவித்துள்ளது.. 13 திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தான் காரணம். அம்மாவின் ஆத்மா அவர்களை கட்டாயம் தண்டிக்கும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy and O Panner Selvam Deputy CM Pressmeet 14 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->