தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிப்பு வெளியாகியது!! - Seithipunal
Seithipunal


இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் 3,186 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

காவலர்கள் (நிலை 1, நிலை 2), தலைமை காவலர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை ஹவில்தார் நிலையில் பணிபுரியும் 3000 பேருக்கு காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, தீயணைப்பு துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், தீயணைப்போர் ஆகிய 120 நிலைகளில் உள்ளவர்களுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறையில் முதல் மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் 60 பேருக்கு மற்றும் வானொலி, நாய் படை, காவல் புகைப்பட கலைஞர்கள் பிரிவில் 6 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்பு பணி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Awards Announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->