காவேரி - குண்டாறு திட்டம்... வரலாறு காணாத தொகையை ஒதுக்கி அறிவித்த தமிழக முதல்வர்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இராமநாதபுரம் மாவட்ட நலத்திட்டப்பணிகளை துவங்கி வைத்து, கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த சந்திப்பில், " காவேரி குண்டாறு இணைப்பு திட்டம் ரூ.14 ஆயிரம் கோடி செலவில் திட்டமிடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் மிகப்பெரிய பலனை பெறவுள்ளது. 

எந்த ஆட்சியும் இல்லாத வகையில், அம்மாவின் தலைமையில் நடைபெற்று வரும் அரசு ரூ.14 ஆயிரம் கோடி நீர் மேலாண்மைக்காக அறிவித்துள்ளது. இதனால் வறட்சி மாவட்டங்கள் பல நல்ல பலனை பெறவுள்ளது. இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இது நிறைவு பெரும் " என்று தெரிவித்தார்.

குண்டாறு - காவேரி இணைப்பு திட்டம் என்பது, பல வருடங்களாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ள திட்டமாகும். தமிழகத்தின் மையம் மற்றும் தென் மாவட்ட பகுதிகளில் உள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. 

இங்கு தேவையான அளவில் முன்னொரு காலத்தில் கால்வாய் போக்குவரத்து இருந்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்கள் செழிப்புடன் இருந்து வந்த நிலையில், நாளடைவில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு மற்றும் மணல் திருட்டு போன்ற பல காரணங்களால் வறட்சியை சந்தித்தது. இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில், இம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமும், விவசாய பணிகளும் புத்துயிர் பெரும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Announce Kavery Vaigai Gundar River Link Scheme


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->