பாஜகவுக்கு பணிந்த தமிழக அரசு... சற்றுமுன் வெளியான பரபரப்பு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


வாரத்தின் அனைத்துநாட்களும் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய வழங்கப்பட்டுள்ள அனுமதி, பாஜகவுக்கு திமுக மாநில அரசு பணிந்துவிட்டதை காண்பிக்கிறது, இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியினர் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நவ.1 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்லவும், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதனைப்போல, உணவகங்கள் உட்பட அனைத்துவகை கடைகளும் இரவு 11 மணிவரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நர்சரி, மழலையர் பள்ளிகள் முழுமையாக செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவிழா மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை தொடருகிறது" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

முன்னதாக, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்களை அனைத்து நாட்களிலும் தரிசனத்திற்கு திறக்க அனுமதி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது, திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

மேலும், உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ், சன் பிக்ச்சர்ஸ் போன்ற திரைத்துறை தயாரிப்பாளர்கள் வளர திரையரங்கு திறந்து விடப்பட்டுள்ள நிலையில், கோவில்களில் கொரோனா எப்படி பரவும்? என்று கடுமையான கேள்வி எழுப்பி, நேரடியாக 10 நாட்களுக்குள் கோவில்கள் திறக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தது இருந்தார். 

இந்நிலையில், அக்டோபர் 14 ஆம் தேதியான இன்று தமிழக அரசு, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என அறிவித்து இருக்கிறது. இது பாஜகவுக்கும், பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, பாஜகவுக்கு திமுக தலைமையிலான தமிழக அரசு பணிந்து விட்டது என பாஜகவினர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

ஆனால், தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் அனுமதி வழங்கிஉள்ளதற்கு காரணம், தமிழகத்தின் கொரோனா பரவல் குறைவாக உள்ளது என்பதால் மட்டுமே. கடந்த பல வாரமாக கொரோனா பரவல் குறைந்து இருப்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு, மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu BJP Protest Victory TN DMK Govt Announce TN Temple Public Visit All Days


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->