மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டவே திமுக அரசு விருப்பம் - அண்ணாமலை குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்ட முனைப்புடன் இருந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக அக்டோபர் மாதம் 6 & 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்த இரண்டு நாட்களிலும் 9 மாவட்டத்திற்கும் அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதன்போது பேசிய அவர், மக்கள் பயனடையும் திட்டத்தில், 80 % திட்டங்கள் மத்திய அரசின் திட்டம் ஆகும். 

மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தும் திட்டத்திற்கு, திமுக தலைமையிலான மாநில அரசு தனது ஸ்டிக்கர் போட்டோவை ஒட்ட வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருந்து வருகிறது " என்று தெரிவித்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு தனது திட்டம் என அறிவித்து வருவதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu BJP President K Annamalai Speech Election Campaign about TN Govt Sticker Central Govt Scheme


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->