பாஜகவின் போராட்டத்திற்கும், அவரின் உறுதியான நிலைப்பாட்டுக்கும் கிடைத்த வெற்றி - எச்.ராஜா பெருமிதம்.! - Seithipunal
Seithipunal


அனைத்துநாட்களிலும் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, தமிழ்நாடு பாஜக போராட்டம் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் உறுதியான நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை மேற்கோள்கண்பித்து, வார இறுதி விடுமுறை நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால், மதுபானக்கடை, திரையரங்குகள் போன்றவை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக முறையிட்டு, நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அக். 7 ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் முடிவில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 10 நாட்களுக்குள் கோவில் திறக்கப்பட வேண்டும், இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடக்கும் என எச்சரித்தார். 

இந்நிலையில், இன்று தமிழக அரசு வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஞாயிற்று கிழமையும் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், "எல்லா நாட்களிலும் கோவில்கள் பக்தர்களின் வழிபாட்டிற்கு திறந்து வைத்திருக்க வேண்டும் என்று பாஜக போராட்டம் மற்றும் மாநிலத்தலைவரின் உறுதியான நிலைபாட்டிற்கு கிடைத்த வெற்றி.

பாஜகவின் கோரிக்கையை ஏற்று கோயிலை திறக்க உத்தரவிட்டிருக்கின்ற மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ட்விட்டர் பதிவுகள் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu BJP H Raja Thanks to BJP Workers and TN Govt about Announcement of All Day Temple Dharsana Permission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->