எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு அஞ்சிய தமிழக முதல்வர்?.. எச்.ராஜா பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முருகனின் அறுபடை வீடுகளில் வேல் கொண்டு சேர்க்கும் யாத்திரையாக வேல் யாத்திரை துவங்கப்பட்டது. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டு இருந்த நிலையில், தமிழக அரசு வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்தது. 

திருத்தணிக்கு முதலில் படையோடு புறப்பட்ட பாஜகவினர், திருத்தணியில் வேல் யாத்திரையை முடித்ததும் கைது செய்யப்பட்டனர். பின்னர் பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, " தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் பங்கேற்ற கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் பரவாத கொரோனா தொற்று, வேல் யாத்திரை மூலமாக பரவிவிடப்போகிறதா என்ன?. எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு அஞ்சியே வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu BJP H Raja Press meet at Kanchipuram 9 November 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->