பொன். இராதாகிருஷ்ணனுக்கு கொரோனா வைரஸ் உறுதி..! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 155,827,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 3,255,399 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 133,254,815 பேர் குணமடைந்துள்ளனர்.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,10,77,410 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,72,80,844 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,01,68 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், தேர்தல் காலங்களில் சரியாக கடைபிடிக்கப்படாத கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்திலும் இரண்டாம் கொரோனா அலை பரவல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் நடந்த தேர்தலில் பாஜக சார்பில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கி தோல்வியை தழுவிய பொன். இராதாகிருஷ்ணனுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu BJP Former Central Minister Pon Radhakrishnan test positive Corona Virus 6 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->