தமிழகத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி தேர்தலா?! கசிந்தது தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ள தேதிகள்!  - Seithipunal
Seithipunal


தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் சட்டசபை  பதவி காலம் ஆனது இந்த வருடம் முடிவடைய இருக்கிறது. இதில் தமிழக சட்டசபையின் பதவி காலம் ஆனது மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற நிலை தற்போது இருக்கிறது. பிஹாரில் சட்டமன்ற தேர்தலை கொரோனா காலத்திலும் நடத்தி இருப்பதால், ஒத்திவைக்க வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாக தெரிகிறது.

இந்த நிலையில் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே மாதம் ஆரம்பம் முதல் இறுதி வரை அக்னி நட்சத்திரத்தின் காரணமாக வெயில் சுட்டெரிக்கும் என்பதால் அந்த நேரத்தில் தேர்தலை தவிர்க்க வேண்டும் என அரசு அதிகாரிகளும், தேர்தல்  பணியாளர்களும் கோரிக்கை வைத்ததையடுத்து தேர்தலை ஏப்ரல் மாதமே நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 7, 10, 12, 16 ஆகிய தேதிகளில் 4 கட்டமாக தேர்தலை நடத்த முடிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 7ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையானது 24ஆம் தேதி நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேதிக்கு அரசியல் கட்சிகள் ஆட்சேபணை தெரிவிக்குமானால் தேதிகள் மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி தேர்வுகளை பொறுத்து, அதற்கு சிக்கல்கள் ஏதும் உருவாகாத வண்ணம், தேதிகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மே 24ஆம் தேதி வரை தமிழக சட்டசபை ஆயுட்காலம் இருக்கும் நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதி நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu Assembly Election 2021 dates


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->