ஆக ஸ்டாலின் அவர்களே புரிந்ததா?! ஸ்டாலின் பாணியிலேயே நக்கல் செய்த தமிழிசை!!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் ஸ்டாலின் கஜா புயல் தாக்கியபோது பிரதமர் மோடி நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை என தொடர்ந்து மத்திய ஆளும் கட்சியினை விமர்சித்து வருகிறார். மேலும், பல எதிர்க்கட்சிகளின் விமர்சங்களும் இதையே கூறுகின்றன.

இந்நிலையில், திமுக தலைவர் பிரதமர் அலுவலகம் ஃபானி புயல் பாதிப்பு தொடர்பாக பதிவிட்டுள்ள ட்வீட்டை மேற்கோள் காட்டி விமர்சனம் செய்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழிசை தனது ட்விட்டரில், "இதைப்போல்தான் கஜா புயல் வந்த போதும் பிரதமர் செய்தார். ஒரு ட்விட்டர் செய்திகூட அனுப்பவில்லை. என ஸ்டாலின் பொய் பிரச்சாரம். ஏன் வரவில்லை?வரவில்லை? என்று கேட்ட வாழைப்பழக்கதை போல். இதுதான் PMO நடைமுறை! ஆக! புரிந்ததா? ஆக! ஆகா?ஆக!" எனப் பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு ஸ்டாலின் அடிக்கடி பயன்படுத்தும் சொல்லான, "ஆக" என்பதை குறிப்பிட்டு கிண்டல் செய்யும் விதமாக தமிழிசை பதிவிட்டிருப்பது, அரசியல் வட்டாரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai trolls dmk stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->