மக்களுக்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.! இந்த தேர்தல் முடிவுகளை மக்களால் மட்டுமே தீர்மானிக்க இயலும்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான தமிழிசை சவுந்தர்ராஜன்., சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது., 

இந்த தேர்தல் முடிவுகளை பாரதிய ஜனதா கட்சியானது உற்சாகத்துடன் எதிர்நோக்கி., வெளிவந்த கருத்து கணிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில்., தமிழகத்தில் கருத்து கணிப்புகளானது மாற்றம் பெரும். இந்த தேர்தலின் இறுதியில் தேசிய அளவில் வெளியான கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை விட அதிகளவு இடத்தை பெறுவோம். 

தமிழகத்தை பொறுத்த வரையில் கள நிலவரத்தை யாரும் கணிக்க இயலாத நிலையில்., பாரதிய ஜனதா கட்சி மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அதிக இடங்களை வெற்றி பெரும். அதனை போன்று அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளிலும் வெற்றி பெரும். 

அனைத்து கருத்து கணிப்புகளையும் சரியாக கூறிவிட இயலாது., கருத்து கணிப்பின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சியானது இருக்கிறது என்று எவ்வாறு கூற இயலும்., தோல்வி பயத்தால் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில அநாகரீக செயல்களை செய்து வருகின்றனர்.  

நான் போட்டியிட்டுள்ள தூத்துக்குடி தொகுதியில் மக்களிடம் உண்மையை கூறி வாக்கு சேகரித்துள்ளேன். நேர்மையான அரசியல்வாதியான எனக்கு நிச்சியம் மக்கள் வாக்களித்திருப்பார்கள்., இன்றைய முடிவில் நான் வெற்றி பெறுவேன். தமிழகத்தில் இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் தேர்தல் முடிவு சரிவர எட்டப்படவில்லை. 

இதுமட்டுமல்லாது நடிகர் கமல்., டிடிவி., சீமான் போன்ற மூன்று புதுமுகங்கள் மக்களை சந்தித்து வந்த நிலையில்., மக்கள் எந்த விதமான தாக்கத்தை சந்தித்துள்ளனர் என்ற தகவலானது இன்று இறுதியில் தெரியவரும். டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களுக்கு தேவையான பல நன்மைகளை பற்றியும்., அதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்று தெரிவித்தார். 




 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai speech about lok shaba election and result


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->