ஏழை மாணவியின் கனவை நனவாக்கிய தமிழிசை! மகிழ்ச்சியில் மாணவியின் குடும்பத்தினர்! - Seithipunal
Seithipunal


மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இதில், சென்னையை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த தையல் தொழிலாளியின் மகளான ஜீவிதா என்ற மாணவி அரசுப் பள்ளியில் படித்து, 605 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வுவில் தேர்ச்சி பெற்றார்.

மாணவி ஜீவிதாவுக்கு அரசு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தாலும், கல்வி கட்டணம் செலுத்தும் அளவிற்கு அவர்களிடம் வசதி இல்லை என சமூகவலைத்தளங்கள் மூலம் செய்திகள் வெளியாகின. இதனை அறிந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அந்த மாணவியின் கல்விச் செலவை முழுவதையும் ஏற்பதாக கூறியுள்ளார்.

நேற்று தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், “நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஏழை தையல் தொழிலாளர் மகள் ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்த அவர், மேலும் ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவ கனவு நனவாகட்டும் மாணவி ஜீவிதாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai helps to poor student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->