#Breaking: ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதற்கட்டமாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்த அறிவிப்பில், " திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவிழா மற்றும் மதம் சார்ந்த கூட்டத்திற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைப்போன்று, கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வணிக காய்கறி விற்பனையை மையங்கள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான மொத்த காய்கனி வியாபார வளாகங்களில் உள்ள சில்லறை வியாபார கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து பயணத்தில் இருக்கைகளில் அமர்ந்து மக்கள் செல்லும் வகையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். மேற்கூறிய உத்தரவுகளை மக்கள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும். 

முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களை பேருந்து பயணத்தில் அனுமதிக்க கூடாது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும். முகக்கவசம் அணியாமல் வந்தால், அவர்களை பணிசெய்ய அனுமதிக்க கூடாது.

தேநீர் கடைகளில் இரவு 11 மணிவரை 50 விழுக்காடு இருக்கைகள் அடிப்படையில் தேநீர் அருந்த அனுமதி வழங்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே அனுமதி செய்யப்பட வேண்டும். தனியாக இருக்கும் திரையரங்குகளில் அதிகபட்சம் 200 பார்வையாளர்களை அனுமதி செய்யலாம். இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டும் பங்கேற்கலாம் " என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilandu Govt Announce Corona Lockdown 8 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->