மீண்டும் நிபா வைரஸ்.! அலட்டாகும் தமிழக - கேரள எல்லை மருத்துவமனைகள்.!! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் கடந்த வருடத்தில் நிபா வைரஸானது பரவ துவங்கியது. நிபா வைரஸ் என்ற பெயரை கூட அறிந்திருக்காத நிலையில்., சுமார் 80 க்கும் மேற்பட்ட மக்கள் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 

இந்த காய்ச்சலால் சுமார் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வைரஸ் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட மருத்துவர்கள்., பழந்திண்ணி வவ்வால்களின் மூலமாக இந்த காய்ச்சல் பரவுவதாக கண்டறிந்தனர். இந்த வைரஸின் தாக்கமானது மலேசியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில்., கேரளாவில் உள்ள 23 வயதுடைய கல்லூரி மாணவர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அறிந்த மருத்துவர்கள்., அவருக்கு தனி வார்டை தயார் செய்து., பிரத்தியேக சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதுமட்டுமல்லாது மாணவரின் நண்பர்கள் என்று அவருடன் இருந்த சுமார் 86 பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை மேற்கொண்ட சுமார் இரண்டு செவிலியர்களுக்கு இந்த வைரஸின் தாக்கமானது ஏற்பட்டுள்ளது. 

இந்த தகவலானது தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்., தமிழக - கேரள எல்லை பகுதியில் இருக்கும் மக்கள் மற்றும் மருத்துவமனைகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக கன்னியாகுமரி., திருநெல்வேலி., தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த அணைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்குமாறும்., நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய வழிமுறை மற்றும் கையாளப்படவேண்டிய விதம் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilandu and kerala borders hospital high alert to nipah virus


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->