தமிழக கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய மரண செய்தி.!  - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் உள்ள தமிழ் வானொலி மற்றும் கிரிக்கெட் வர்ணனை ரசிகர்கள், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் தமிழ் வர்ணனைக்கு தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அவர் உடல்நகுறைவார் காலமானார். 

மூன்று முக்கிய நூல்களை எழுதி உள்ள அப்துல் ஜபார். "அழைத்தார் பிரபாகரன்" என்கின்ற நூலில் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தான் சந்தித்த அனுபவங்களை உணர்ச்சி பூர்வமாகவும், அங்கு நடக்கும் நிகழ்வுகளையும் தத்ரூபமாக எழுதியிருந்தார்.

மேலும் ஆடியோ நூல்களிலும் அவர் தனது பங்களிப்பை அளித்துள்ளார். இதேபோல் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக இவர் பணியாற்றிய காலங்களில் இவருக்கு ரசிகர்கள் உலகம் முழுவதும் குவிய தொடங்கினர்.

தமிழ்நாடு -கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சிப் போட்டியில் முதல்முறையாக வானொலி மூலம் வர்ணனை செய்தார். 1980 காலகட்டங்களில் பல சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களுக்கு வானொலியில் வர்ணனையும் இவர் செய்துள்ளார். அதன் பிறகு இஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போட்ஸ் போன்ற விளையாட்டு தொலைக்காட்சிகளிலும் இவர் தமிழ் வர்ணனை செய்துள்ளார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இன்று அப்துல் ஜப்பார் காலமானார். அவருக்கு வயது 81 ஆகும். அப்துல் ஜப்பார் அவர்களின் மறைவிற்கு அவருடைய ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள், வானொலி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரும் அவரின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil nadu rj abdul jabbar death


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->