ஜியோ ஹாட்ஸ்டாருடன் ரூ.4 ஆயிரம் கோடி ஒப்பந்தம் செய்துள்ள தமிழக அரசு..!
Tamil Nadu government has signed a Rs 4000 crore deal with Jio Hotstar
ஜியோ ஹாட் ஸ்டாருடன், தமிழக அரசுடன் 04 ஆயிரம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் கமல்ஹாசன், நாகார்ஜுனா, மோகன்லால், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் படைப்பாற்றல் சூழலை வலுப்படுத்தும் அரசின் அனைத்துப் பணிகளையும் திராவிட மாடல் தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. OTT தளங்கள் இன்றைய இளம் படைப்பாளிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளன. கன்டென்ட்தான் ராஜா. கதைச் சொல்லச் சரியாக இருந்தால், அது மொழிகளையும் எல்லைகளையும் தாண்டி பாராட்டப்படும் என்று பேசியுள்ளார்.
அத்துடன், இளம் படைப்பாளர்களைப் பயிற்சிப்படுத்தி, உள்ளூர் திறமைகளுக்கு அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு வலுவான படைப்பாற்றல் பொருளாதாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றும், தென்னிந்தியப் பிராந்தியம், குறிப்பாக தமிழ்நாடு, Hotstar உடன் இணைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் துறைக்காக ரூ.12,000 கோடி முதலீட்டை கொண்டு வருகிறது. இதன்மூலம் சுமார் 1,000 நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் 15,000 மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டில் படைப்பாற்றல் மற்றும் புதுமையை வளர்க்கும். Jio Hotstar போன்ற தளங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளார்.
English Summary
Tamil Nadu government has signed a Rs 4000 crore deal with Jio Hotstar