முதல்முறை தமிழகம் திரும்பிய தமிழிசை.! கூறிய வார்த்தை என்ன தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


தோல்விகளை கண்டு பெண்கள் துவண்டு விடக்கூடாது. துணிச்சலாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கே வாழ்க்கை என தெலுங்கானா ஆளுநர் பதவி எற்ற பின் முதல்முறை தமிழக நிகழ்வில் கலந்து கொள்ளும் தமிழிசை கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழிசை பாரதி விழாவில் பேசும்போது இது குறித்து கூறியுள்ளார். அதில்,"பாரதியார் அளவிற்கு பெண்மையைப் போற்றி கவிதை வடிக்க யாராலும் முடியாது. "சக்கரவர்த்தினி" என பெண்ணை புகழாரம் சூட்டியவர் அவர்தான்.

வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை கண்டு அஞ்சி ஓடாமல் அதிலிருந்து நல்ல பாடங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். சமுதாயத்தில் அனைத்து பெண்களும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் எனக்கூற முடியாது. பலர் முன்னேற முடியாத சூழலில் தான் இருக்கின்றனர்.

நம்மை அடக்குபவர்களை தலைநிமிர்ந்து எதிர்க்கவேண்டும். இரும்புப்பிடி போல் பல பெண்களை சித்தரிப்பதாக தெரிகிறது. பாரதியாரின் வரிகளை நினைவு கூர்ந்து வீழ்வேன் என்று நினைக்காமல் எழுவேன் என பெண்கள் செயல்பட வேண்டும். அப்போதுதான் அவர்களின் கனவு மெய்ப்படும்.

சிறிய தோல்விகளும், கவலைகளுக்கும் பெண்கள் தற்கொலை முடிவை எப்போதும் எடுக்கக்கூடாது. துணிச்சலாக எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான். பாரதியாரின் வரிகளை பெண்கள் உறுதிபூண்டு துணிச்சலாக இருக்க வேண்டும்." என அவர் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil isai back to tamilnadu and talk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->