கல்வி கொள்கை பேச்சுக்கு சூர்யா பதிலடி.! பலர் வரவேற்பு.!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா மூன்று வயதிலேயே மூன்று மொழி கல்வி திணிக்கப்படுகிறது என்று சர்ச்சை பேச்சு அனைவராலும் பேசப்பட்ட ஒரு செய்தியாகும். இதில் பலர் எதிர்ப்புகளும் தெரிவித்துள்ளனர் பலர் வரவேற்புகளும் தெரிவித்துள்ளனர்.

சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெருவாரியாக மாறி உள்ளது சூர்யாவின் பேச்சு குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கடுமையாக எதிர்த்து கேள்விகளை முன்வைத்தனர். சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் இதற்கு ஆதரவு கருத்து கூறியுள்ளார்.



 

இதற்கு சூர்யா பதிலடி கொடுத்துள்ளார் கல்வி என்பது ஒரு சமூக அறம் பணமிருந்தால் விளையாடு என்று சொல்கிற அளவிற்கு  சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும் வசதி படைத்தவர்கள் ஒன்றாக இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவை இல்லை மனசாட்சியை போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்சிதான் அனைவருக்கும் சமமான தேர்வு என்பதை விட ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளும் சமமான தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வதுதான் அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்தியுள்ளார்.

அகரம் பவுண்டேஷன் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் நீட் தீர்ப்பிற்கு பிறகு அரசு பள்ளியில் படித்த ஒருவர் கூட அகரம் பவுண்டேஷன் மூலம் மருத்துவ கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. புதிய கல்விக் கொள்கைகள் அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு பரிந்துரையை ஏற்பது அச்சமூட்டுகிறது. உங்களது கொள்கையை பற்றி ஆக்கபூர்வமான கருத்துக்களை இணைதளத்தில் கூறுங்கள் மத்திய அரசும் அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டு இருந்து தேவையான திட்டங்களை மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன் ஏழை மாணவர்களுக்கு கல்வி உயரே பறப்பதற்கான சிறகு அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surya says about students


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->