7 பேர் விடுதலை விவகாரத்தில் புதிய குண்டு போட்ட உச்சநீதிமன்றம்! சிக்கலில் தமிழக அரசு!  - Seithipunal
Seithipunal


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், பேரறிவாளன் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வுக்கு முன் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஆளுநருக்கு எங்களால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது. மேலும், தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்கள் அல்ல, தமிழக அரசு தான் என தெரிவித்தார்.

7 பேர் விடுதலை கோப்பு ஆளுநர் முன்பு ஏன் இத்தனை மாதம் நிலுவையில் உள்ளது? என நீதிபதி கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் மீது இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது என தெரிவித்தார். இதனையடுத்து அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம்  முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court said about 7 prisons release


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->