சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றி கூறுவது ஏன்? - Seithipunal
Seithipunal


தைப்பொங்கல் (சூரியப் பொங்கல்) :

பொங்கல் பண்டிகை என்பது  சூரிய வழிபாட்டு பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. தை மாத முதல் நாளில் சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்தர அயனம் என்று பெயர்.

சூரிய வழிபாடு செய்ய தை முதல் நாள் உகந்த நாளாகும். அதனால் கடவுளுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம்.

சூரிய பகவானை வணங்குவதன் சிறப்பு :

சூரிய பகவான் வேத வடிவமானவர் என்று ஞானநூல்கள் கூறுகின்றனர். தட்சிணாயனத்தின் ஆறு மாதங்களில் பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் பல நோய்கள், துன்பங்கள் உத்தராயண காலத் துவக்கத்தில் இறைவன் அருளால் நீங்குவதால், தை மாதம் முதல் தேதி சூரிய பகவானுக்கு ஆராதனைகள் செய்து சூரியப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.

மகாபாரதத்தில் திரௌபதிக்கு அட்சய பாத்திரம் அளித்து, என்றும் வற்றாத உணவு அளித்ததும் சூரிய பகவானே ஆவார்.

மகாபாரதத்தில் சூரியனுக்கு சித்திரை முதல் 12 மாதங்களிலும் 12 பெயர்கள் கூறப்படுகின்றன. அவை மித்ரன், ரவி, சூரியன், பானு, ககன், பூஷ;ணன், pரண்யகர்ப்பன், மரீசி, ஆதித்யன், ஸவிதா, அர்க்கன், பாஸ்கரன் என்பதாகும்.

சூரிய பகவானின் அருளைப் பெற மக்கள் வழிபட தொடங்கினார்கள். மேலும், பல நோய்களை சூரிய கிரகணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும், புராண இதிகாசங்களும் சூரிய பகாவானின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறார்.

சூரிய பகவான் தன் செங்கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டுகிறார். கடல்நீரை ஆவியாக்கி மழையை பொழியச் செய்கிறார். கிருமிகளை அழித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார். மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார். எனவே, அவருக்குரியதாக சூரியப் பொங்கல் அமைந்துள்ளது. சூரியனுக்குரிய நாளாக தைப்பொங்கலும், கால்நடைகளுக்குரிய நாளாக மாட்டுப்பொங்கலும், நெடு நாளாக பார்க்க முடியாமல் இருந்த நமது உற்றார் உறவினரை காண்பது காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது.
 

English Summary

sun pongal 2019


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal