அக்னி நட்சத்திரம் ஸ்டார்ட்ஸ்... கத்தரிக்காய் போல வெதும்பிப்போன மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தற்போதைய வருடத்தின் கோடைகாலம் துவங்கிய நாட்களில் இருந்து தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வெயிலின் தாக்கமானது அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் மற்றும் திருத்தணி பகுதிகளில் வெப்பம் அதிகளவு பதிவாகி வருகிறது. 

இந்த நிலையில், இன்று (4, மே 2020) முதல் அக்னி நட்சத்திரம் துவங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று துவங்கும் அக்னி நட்சத்திரம் வரும், மே மாதம் 28 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 

இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயிலின் தாக்கமானது மிகவும் அதிகளவு இருக்கும். தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பொதுப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெயிலின் தாக்கத்தை பெரும்பாலும் மக்கள் தவிர்த்துள்ளனர்.  

இருப்பினும் மேல் மாடியில் இருக்கும் கான்கிரீட் வீடுகள், சிமிண்ட் கூரை வீடுகளில் வெப்பத்தின் அளவு கடுமையான அளவு அதிகரித்து இருக்கும். அக்னி நட்சத்திரத்தில் இருந்து தப்பிக்க பருத்தியினால் ஆன ஆடைகளை உடுத்துவது, நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிடுவது மற்றும் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை வெளியே செல்லாமல் இருப்பது போன்றவை மூலம் உடலின் நீர்வற்றும் பிரச்சனையை தறிவிக்கலாம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

summer season agni star starts today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->