பள்ளியே கோவில் அது அந்தக்காலம்! கோவில் தான் பள்ளி இது இந்தக்காலம்!! - Seithipunal
Seithipunal


கட்டிடப் பணிகள் நிறைவடையாததால், விருத்தாசலம் அருகே உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் கோயிலில் அமர்ந்து படிக்கின்றனர். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் பெண்ணாடம் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 30-க்கும் குறைவில்லாத மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தமே 2 ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழக அரசுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ஊர் பொதுமக்கள் ஒரு கோரிக்கையை வைத்தனர். அதில், ' பள்ளியின் கட்டிடம் வலுவிழந்து காணப்படுவதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

புதிய கட்டிடத்திற்கான நிதியாக ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டிடம் காட்டும் பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து பள்ளியின் கட்டிடம் முழுமையடையாததால், பள்ளி அருகில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் அமர்த்தப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டது. 

விரைவில் இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

students study at temple


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->