உடையார்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்!! போலீஸ் அதிகாரிகள் செய்த காரியத்தால் பரபரப்பு!!  - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் சுத்தமல்லி என்ற கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒன்று இருக்கின்றது. இதில் அந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கிராமத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 

இதனால், காலை , மாலை என இரு வேளைகளும் மாணவ, மாணவிகள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் சூழ்நிலை இருக்கின்றது. இதனால் வீட்டிற்கு தாமதமாக செல்லும் நிலையில் மாணவிகள் மிகவும் அல்லாடுகின்றனர். 

காலையில் நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்து வராமல் இருந்ததால், மாணவ மாணவிகள் சாலையில் இறங்கி போராட ஆரம்பித்தனர். நேற்று சுத்தமல்லியில் விளாங்குடி- தா.பழூர் சாலையில் அமர்ந்து மாணவ-மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

பின்னர் போராட்ட்டக்காரர்களின் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைவில் எடுத்துரைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒருமணிநேரம் விளாங்குடி- தா.பழூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

students protest in udaiyarpalayam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->