#Breaking: 1 ஆம் கட்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. அலர்ட் ஆகும் தமிழகம்.!!  - Seithipunal
Seithipunal


நாகை, பாம்பன் மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் ஒன்றாம் கட்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடல் பகுதியில் இன்று இரவு புயல் உருவாக இருக்கும் நிலையில், துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாகும் சூழல் ஏற்படும் பட்சத்தில், துறைமுகத்தில் முதற்கட்ட சமிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். 

ஏற்கனவே சென்னை வானிலை மையம் அந்தமான் தீவுப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக அறிவித்து இருந்தது. மேலும், அப்பகுதிக்கு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், காற்று பலமாக வீசும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. 

இந்த நிலையில், நாகப்பட்டினம் மற்றும் பாம்பன், காரைக்கால் துறைமுகத்தில் முதற்கட்ட ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடல் பகுதியில் இன்று இரவு நேரத்தில் புயலானது உருவாக இருப்பதாகவும், இதனால் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டானது ஏற்றப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Storm warning in tamilnadu harbor make first warning flag


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->