ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ 100 கோடி! ஸ்டெர்லைட் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த வருடம் மே மாதம் 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 15 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கப்பட்டது.
  
இந்நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாக துணைத் தலைவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

* தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ 100 கோடி மதிப்பில் 6 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

* கிராமங்களுக்கு குடிநீர் திட்டம், மரக்கன்றுகள் நடுதல், மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி, பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

* அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் 3 முதல் 6 மாதங்களுக்குள் அடிக்கல் நாட்டப்படும். 

* தூத்துக்குடி மக்களுடன் கலந்து பேசியே இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என ஸ்டெர்லைட் நிர்வாக துணைத் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sterlite CEO Press Meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->