காரணமே இல்லமால் ஸ்டெர்லைட் ஆலையை அரசு முடியுள்ளது, வேதாந்தா வழக்கறிஞர்.! - Seithipunal
Seithipunal


சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடும்படி, நீதிமன்றம் தான் உத்தரவிட முடியும் என, ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள், மூன்று மாததுக்கு பின் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூட நீதிமன்றம் தான் உத்தரவிட முடியும் என தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையில் தற்போது ஏற்பட்டுள்ள மாசுவை அப்புறப்படுத்த தமிழக அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல், உள்நோக்கத்துடன் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளதாக வாதிட்ட ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 

இதையடுத்து, வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sterlite case investigation again in high court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->