மீட்கப்படும் சிலைகள்!! தோண்ட தோண்ட கிடைத்த புதையல்கள்!! ஆச்சர்யத்தில் உறைந்த ஊர்பொதுமக்கள்!!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள கோங்குடி ஊராட்சி மன்றத்திற்கு சிவன் கோவில் அருகே ரூபாய்.17 லட்சம் மதிப்புள்ள புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கு அஸ்திவாரம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அங்கு தொழிலாளர்கள் அஸ்திவாரம் அமைக்க குழி தோண்டியபோது, அங்கு மண்ணுக்குக் கீழே இரண்டரை அடி உயரமுள்ள அம்மன் சிலை மற்றும் பலிபீடம் அடித்தளப்பீடம் ஆகியவை புதைந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அறந்தாங்கி தாசில்தார் சூரிய பிரகாஷுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று சிலை மற்றும் பீடங்களை தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் குழிகள் தோண்டும் பணி நடைபெற்றது.

அங்கு மீண்டும் அம்மன் சிலை, பைரவர் சிலை மற்றும் நாயன்மார்கள் சிலை போன்றவை கிடைத்துள்ளது. அவை மீண்டும் அரசு அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் 150 மட்டும் 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம். இவை அனைத்தும் சிலைகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்விற்கு பின்னர், இது குறித்து முழு விவரம் தெரியவரும். இந்த விஷயம் பொது மக்களிடையே தீயாக பரவி வருகிறது. எனவே இதனை காண பொதுமக்கள் அங்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் அரசுக்கு தொல்லியல் துறை அதிகாரிகள் இந்த இடத்தில் ஆராய்ச்சி செய்து மண்ணில் புதைந்து கிடக்கும் புதையல்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

statue in pudhukottai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->