சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உண்மைக்கு எதிர்ப்பாக உதவி செய்த அரசு அதிகாரி..!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காளையார்கோவில் அருகே பெரிய நரி கோட்டை நடுநிலைப்பள்ளியில் 2015 ஆம் ஆண்டில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய முருகன் என்பவர் அந்த பள்ளியில் படித்த ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. 

சிவகங்கை மகளிர் காவல் நிலையத்தினர் முருகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சிவகங்கை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் இந்திரா காந்தி என்பவர் இருக்கின்றார். இந்நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்ற போது பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு சிலர் முன்னுக்கு பின் முரணாக பிறழ்சாட்சி தெரிவித்து இருக்கின்றனர். 

இதனால், சந்தேகம் அடைந்த நீதிபதி அந்த குழந்தைகளிடம் அதட்டி விசாரித்தபோது தங்களை இது போல மாற்றி பேச கூறி சிலர் வற்புறுத்தியதாக தெரிவித்து இருக்கின்றனர். பின்னர், இதுகுறித்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞரான இந்திரா காந்தியும், முருகனின் மனைவி சீதாலட்சுமியும் குழந்தைகளை வற்புறுத்தி மிரட்டி பிறழ் சாட்சி சொல்ல வைத்தது தெரியவந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, மகளிர் காவல் துறையினர் 3 பேர் மீது வழக்குப் பதிந்து தலைமைஆசிரியர் முருகனை கடந்த மாதம் கைது செய்தனர். பின்னர், இந்திரா காந்தியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அரசு பெண் வழக்கறிஞர் பிறழ் சாட்சி கூறச் சொல்லி கைதான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

State Government Prosecutor Arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->