உலக தமிழ் மக்களை அசிங்கப்படுத்திய ஸ்டாலின், வைகோ, திருமாவளவன்.! உச்சகட்ட கொந்தளிப்பில் தமிழ் இன மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழ் இன மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் முதல், நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் வரை தமிழ் இன மக்களுக்கு தங்களின் வாழ்த்து செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்திலும் தமிழ் புத்தாண்டு வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களும் தமிழ் இன மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், பல அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக, இந்தியாவின் முதல் குடிமகன், இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியை தமிழில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இப்படியாக உலகின் வாழும் அனைத்து தமிழ் மக்களும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடிக் கொண்டு இருக்க, அவர்களுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காமல் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவமதித்து இருப்பது, சமூக வலைத்தளங்களில் தமிழ் மக்கள் ஸ்டாலினுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஸ்டாலினை போலவே அவர் கூட்டணியில் இடம்பெற்று உள்ள வைகோ, திருமாவளவன், கம்னியூஸ்ட் கட்சி தலைவர்கள் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

தமிழர்கள் ஆளவேண்டும், தமிழர்கள், தமிழர்கள் என்று மூச்சு முட்ட கத்திவரும் நாம் தமிழர் கட்சி சீமானும், தமிழர்களை அசிங்கப்படுத்தியுள்ளார். பாடலாசிரியர் வைரமுத்து, திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களும் இந்த பட்டியலில் அடக்கம்.

English Summary

STALIN VAIKO THIRUMA DO NOT WISH TO TAMIL PEOPLE


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal