மகளிரை தொடர்ந்து திருநங்கைளுக்கும்..? ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்று இருக்கிறார். இதனை தொடர்ந்து, அனைத்து மகளிரும் சாதாரண நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அரசாணை வெளியிட்டு இருக்கின்றார். 

இதன்படி, தமிழகம் முழுவதும் இன்று அனைத்து நகர பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்து இருக்கின்றது. இதனை தொடர்ந்து, பல மாவட்டங்களில் இருக்கும் நகர அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் இல்லை என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. 

இது குறித்து இந்துஜா ரகுநாதன் ஸ்டாலினை டெக் செய்து, "திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அரசு அறிவித்தால் நன்றாக இருக்கும்." என்று கோரிக்கை வைத்து ட்வீட் போட்டார். 

இது குறித்து சிந்தித்த ஸ்டாலின் தற்போது இதுகுறித்து, "மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம்.

தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்."என்று தெரிவித்துள்ளார்.

மகரிறை தொடர்ந்து திருநங்கைளுக்கும்..? ஸ்டாலின் வெளியிட முக்கிய அறிவிப்பு.! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin tweet about transgender free bus service


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->