அரசு மருத்துவமனையை ஆக்ஸிஜன் இல்லாததால், கொரோனா நோயாளிகளுக்கு நேர்ந்த கொடூரம்..ஸ்டாலின் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட மின் தடை காரணமாக ஆக்சிஜன் வழங்குவதில் தடை ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவதிப்பட்டதாகவும் அந்த ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 2 பேர் மூச்சு திணறி உயிரிழந்தாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், "திருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். 

மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை, எடப்பாடி பழனிச்சாமியின்  ஆட்சியின் இலட்சணம் இது! 

கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது" என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin tweet about thirupur hospital corona death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->