இந்த ஒரு டயலாக் தான் மோடிக்கு.,!! திரும்ப திரும்ப பேசும் ஸ்டாலின்!! ஸ்டாலின் தோற்றத்தில் மட்டும் மாற்றம்!!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கான தொமுச தொண்டர்கள் கலந்து கொள்ளும் மே தின பேரணி தூத்துக்குடியில் நடைபெற்றது.சினிமா தொழிற்சங்கத்தை சேர்ந்த பூச்சிமுருகன், எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் மற்றும் நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொமுச மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்

மே தின பேரணி தூத்துக்குடி அண்ணா நகரில் துவங்கி விவிடி சிக்னல் வழியாக சிதம்பர நகர் மைதானத்தில் நிறைவுற்றது, அங்குள்ள மே தின நினைவு சின்னத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்,

பின்னர் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தால்தான் உரிமைகள் நம்மிடத்தில் வந்து சேர முடியும், உரிமைகளை ஜனநாயக தன்மையோடு பெற்றிட வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதியை தொழிலாளர் தினமாக  கொண்டாடி வருகிறோம்.

பிரதமர் மோடி நான் தான் நாட்டின் காவலாளி என்கிறார், அவர் நாட்டின் காவலாளி அல்ல, களவானி, திமுக தான் தொழிலாளர்களின் காவலாளியாக செயல்பட்டு வருகிறது. தொழிளார்கள் உரிமையை நிலைநாட்டுவதற்கு கருணாநிதி காட்டிய அக்கறையை தொழிளார்கள் நினைவு கொள்ள வேண்டும்.

மே 1ம் தேதி அரசு விடுமுறை மட்டுமல்ல ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறையாக மாநில அளவில் மட்டுமின்றி மத்திய அளவிலும் அறிவித்தவர் - கருணாநிதி. 45 கோடி தொழிலாளர்கள் உரிமையை மோடி ஆட்சி நான்கு , ஐந்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடிமையாக அடகு வைத்துள்ளது

மத்தியிலும், மாநிலத்திலும் இருக்க கூடிய அரசுகள் தொழிலாளர்கள் உரிமையை நசுக்ககூடிய நிகழ்வுகளை மறந்துவிடக்கூடாது. தொழிலாளர்கள் கோரிக்கைகளை கேட்பதில் கூட எண்ணம் இல்லாத சாடிஸ்ட் தான் மோடி. நாட்டிற்கும், தொழிலாளர் தோழர்களுக்கும், விவசாயிகளுக்கும் 23ம் தேதிக்கு பிறகு விடிவுகாலம் இருக்கின்றது" என மு.க.ஸ்டாலின் பேசினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin speech in thuthukudi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->