திமுகவினருக்கு அதிரடியாக புதிய உத்தரவை பிறப்பித்த ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


குரோம்பேட்டை, நெமிலிசேரி பவானிநகர் ரவி என்பவர் மகள் சுபஸ்ரீ(வயது 22) கந்தன்சாவடியில் உள்ள, தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து, தனது இருசக்கர வாகனத்தில்  தன் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். தலைக்கவசம் அணிந்துள்ளார். துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை அருகே Ocean Dew அபார்ட்மெண்ட் எதிரில் வரும் போது, சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்துள்ளது. 

பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி நிலை தடுமாறிய சுபஸ்ரீயின் மீது மோதிவிட்டது. இரண்டு கைகளின் மீதும் லாரியின் சக்கரம் ஏறி இறங்கி விட்டது. தலையில் காயம். அருகிலுள்ள பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபஸ்ரீ சிறிது நேரத்தில் இறந்து விட்டார். உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ளது. சென்னை மெளண்ட் போக்குவரத்துப் புலனாய்வு காவல்துறை வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகிறார்கள். சுபஸ்ரீ கனடா செல்வதற்காக தேர்வு எழுதியுள்ளாராம்.

இந்தவிபத்து குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், விபத்தில் இறந்தவருக்கு எனது இரங்கல், மேலும் திமுகவின் நிகழ்ச்சிகளுக்காக எவ்வித பேனர்களும், கட் அவுட்களும் தொண்டர்கள் வைக்கக் கூடாது என்றும் அப்படி மீறி வைத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேனர் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க மாட்டேன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin new announcement for dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->